திங்கள், 24 ஜனவரி, 2011

நிமிர்ந்த நடை


மனிதன் மற்ற விலங்குகளில் இருந்து வேறுபட்டு இருக்க ஒரேயொரு காரணம் இருக்கிறது. மனிதன் என்ற ஒரு விலங்கால்தான் நிமிர்ந்து நிற்க முடியும். மற்ற உயிரினங்களால் இது முடியாது.

மனிதனும், கிப்பன் குரங்குகளும்தான் இரண்டு கால்களால் நடப்பவை. வேறு எந்த விலங்கும் பின்னங்கால்களை மட்டுமே உபயோகித்து நடப்பதில்லை. மனிதனுக்கு மிகவும் நெருங்கிய உறவான கொரில்லா கூட லேசாக கூன்விழுந்ததுபோல் முன்னோக்கி வளைந்துதான் நிற்கும். மனிதனை போல் நேர்கோடாக நிற்க முடியாது.

இந்த நிமிர்ந்த நன்னடை மனித உடலில் ஏராளமான மாற்றங்களை செய்திருக்கிறது. மற்ற நாலுகால் விலங்குகளை போல் முகம், தலையை பார்க்காமல் முன்னோக்கி நிமிரும் நிலை ஏற்பட்டது. முதுகெலும்பு, இடுப்பெலும்புகள், கால் எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு கால்களால் நிமிர்ந்து நடக்க, நடக்க பெருவிரல் என்ற கட்டைவிரல் வித்தியாசமான வடிவம் பெற்றது.

பின்கால்களை மட்டும் பயன்படுத்தி நடப்பதால் முன்கால்களை வேறுவிதமான வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவற்றை கொண்டு பல கருவிகளை கண்டுபிடித்தான். இந்த கருவிகளின் செயல்பாட்டுக்கு வசதியாக கைவிரல்களுக்கு எதிராக கட்டைவிரல் உருமாற்றம் அடைந்தது.

சில குரங்குகளுக்கு கட்டைவிரல் இருக்கிறது. ஆனால் மனிதன் அளவுக்கு அவை முழு வளர்ச்சி பெறவில்லை. கைவிரல்களை கட்டைவிரலுக்கு எதிராக மனிதன் கொண்டு வராவிட்டால் இத்தனை கருவிகளை பயன்படுத்தியிருக்க முடியாது. கருவிகளை மனிதன் பயன்படுத்த தொடங்கியபின்தான் மூளையில் சிந்தனை பிரிவுகள் வளர்ச்சி பெற்றன.
கொரில்லாவை போல் இல்லாமல் மனித உடலில் குறைவான ரோமம் இருப்பது மற்றொரு சிறப்பாகும். மார்பிலும் உடலின் சில பகுதிகளிலும் ஓரளவு ரோமங்கள் இருந்தாலும் குரங்கைப்போல் ஒரே போர்வையாக இல்லை.

மனிதனின் கண்கள் இரண்டும் முன்னோக்கி அருகருகே அமைந்துள்ளன. இதனால் கண்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து அலகிட்டு கூர்மையாக உள்ளது. மனித இனத்திற்கும் மற்ற இனங்களுக்கும் இது முக்கியமான வேற்றுமையாகும்.


குரங்கில் இருந்துதான் மனிதன் பரிணமித்தான் என்று டார்வின் கூறினார். இதை மதவாதிகள் எதிர்த்தனர். அறிவாளிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் மனிதனுக்கும் குரங்கிற்கும் மத்தியில் உள்ள இணைப்பு எங்கே என்று கேட்டனர். அந்த இணைப்பை கண்டுபிடிக்காமல் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கருதினர்.

ஜாவாதீவில் உராங்குட்டான் என்ற குரங்கினம் ஏராளமாக உள்ளது. டூபி என்ற டச்சுப்பேராசிரியர், குரங்கு மனிதனை கண்டுபிடிக்க ஜாவா சென்றார். ஆராய்ச்சியில் இறங்கினார். அங்கு கோலோ என்ற ஆற்றின் கரையில் திரினுல் என்ற இடத்தில் மண்டை ஓடுகளையும், தொடை எலும்புகளையும் கண்டுபிடித்தார். விடுபட்டுப்போன பரம்பரையை கண்டுபிடித்து விட்டேன் என்று அறிவித்தார்.

குரங்கினத்தில் இருந்து தோன்றிய முதல் மனிதன் இவன்தான் என்றார். அந்த மனிதனுக்கு பித்தகாந்த் ரோரெக்ட்ஸ் என்று பெயர் சூட்டினார். பித்தகேர் என்றால் கிரேக்க மொழியில் குரங்கு என்று பொருள். அந்தரோபஸ் என்றால் மனிதன் என்றும், ரெக்ட்ஸ் என்றால் நிமிர்ந்து என்றும் பொருள்படும்.

அதாவது நிமிர்ந்து நடக்கும் மனிதன் என்ற அர்த்தத்தில் மனித குலத்தின் முதல்வன் இவனே என்ற டூபி, அவனுக்கு ஜாவாமனிதன் என்றே பெயரிட்டார்.

வியாழன், 6 ஜனவரி, 2011

அதிசயங்களின் ரகசியம்


உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது.

ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.

மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.

இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார்.

பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின்போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை.

கடைசியாக ௧௯௪௫ல் ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசுகிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு ரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன.

கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத ரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

உலக அளவில் சென்டிமென்ட்


நம் நாடு மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலும் ஏகப்பட்ட சென்டிமென்டும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.

நம் நாட்டில் எல்லாமே வலது மயம்தான். எதை கொடுப்பதாக இருந்தாலும் வலது கையால்தான் கொடுக்க வேண்டும். முதல் அடியை வலது காலால்தான் எடுத்து வைக்க வேண்டும் என்கிறார்கள்.

ரோமானியர்களுக்கும் இந்த சென்டிமென்ட் உண்டு. எப்போது வீட்டுக்குள் நுழைவதாக இருந்தாலும் வலது காலை முதலில் எடுத்து வைத்துத்தான் நுழைவார்கள்.

இங்கிலாந்து நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் செருப்பு போடும்போதுகூட முதலில் வலது காலைத்தான் உள்ளே நுழைப்பார்கள். இப்படி செய்வதால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.


வீட்டுக்குள் செருப்பு போட்டு நடப்பது நம்மூரில் புனிதமில்லாத விஷயம். அதோடு சுத்தத்துக்கும் எதிரி. இதனால் நம்மவர்கள் யாரும் வீட்டுக்குள் செருப்பு போடுவதில்லை. இந்த சென்டிமென்ட் தாய்லாந்திலும் உண்டு. அங்கு செருப்புக் காலுடன் வீட்டுக்குள் நுழைந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களை அவமானப்படுத்துவதாக அர்த்தம். அவர்களுக்கு வரவேற்பும் இருக்காது.


நாம் எப்படி மற்றவர்களுக்கு பொருளை கொடுப்பதாக இருந்தால் வலது கையால் கொடுக்கிறோமோ அதேபோல் தாய்லாந்திலும் வலது கை சென்டிமென்ட் உண்டு. அங்கே வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். அப்போது இடது கை, வலது கையின் மணிக்கட்டைப் பிடித்து இருக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் பலன் உண்டாம்.


உள்ளங்கை அரித்தால் வருமானம் என்ற சென்டிமென்ட் வெளிநாடுகளிலும் உள்ளது. துருக்கியில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும். வலது உள்ளங்கை அரித்தால் உள்ள பணமும் போய்விடும் என்பது நம்பிக்கை.


பூனை குறுக்கே போனால் போன காரியம் உருப்படாது என்கிற சென்டிமென்ட் அமெரிக்காவிலும் உண்டு. அதிலும் கறுப்பு பூனை என்றால் கேட்கவே வேண்டாம். உடனே வீட்டுக்குத் திரும்பிப் போய் சோபாவில் படுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அங்கு கறுப்பு பூனை சாத்தானின் குறியீடு.


தரையில் படுத்திருப்பவர்களை தாண்டிப் போகக்கூடாது என்பது நமது பழக்கம். இது அமெரிக்காவிலும் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் குழந்தைகள் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாது.


நாம் இரவில் நகம் வெட்ட மாட்டோம். கொரிய நாட்டினரும் அப்படித்தான். நகம் உடலின் ஒரு பாகம், அதை இரவில் வெட்டினால் எலிகள் தின்றுவிடுமாம், அதனால் நமது ஆன்மாவின் அளவு குறைந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.


பல்லி கத்துவது நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள். இந்தோனேஷியாவில் கெய்கோ என்ற சிறுபல்லி சத்தம் கேட்டால் மக்கள் சந்தோஷப்படுவர். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வார்கள். பிரசவ வலி ஏற்படும்போது இந்த பல்லி கத்தினால் சுகப்பிரசவமாக இருக்கும் என்பது ஐதீகம்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் நம்மைப்போல செட்டிமென்ட் உண்டு.